search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து மரணம்"

    மாமல்லபுரம் அருகே சென்னை ஓட்டல் உரிமையாளர் கார் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    மாமல்லபுரம்:

    சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் மணி (வயது 61). ஓட்டல் உரிமையாளர் இவர் கடந்த 4-ந் தேதி மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார்.

    மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிழக்குகடற் கரை சாலையில் வந்த போது சாலை தடுப்பு தூணில் கார் மோதி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த மணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மணி உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய 2 பேர் கார் மோதி பலியான சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #accidentcase

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லன் சிலை எதிரே இன்று காலை 4 மணி அளவில் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக், அஜித் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் தாறுமாறாக வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக்கும், அஜித்தும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், திருநாவுக்கரசு ஆகியோர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அவர்களுக்கு உதவியாக பொது மக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டு நின்றனர்.

    அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியவர்களை மீட்டுக் கொண்டிருந்த பொது மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய தூத்துக்குடியை சேர்ந்த ஹேமச்சந்திரா (வயது 30), சென்னை தி.நகரை சேர்ந்த ஏகாம்பரம் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் கார்த்திக், அஜித், பிரேம்குமார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாக போலீசார் காயமின்றி தப்பினர். காயம் அடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    முதலில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய தி.நகரை சேர்ந்த டிரைவர் ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிந்தது.

    இதேபோல் ஆம்புலன்ஸ் மீது மோதிய காரை பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்களுக்கு காரை ஓட்ட பெற்றோர் அனுமதி கொடுத்தது எப்படி? அதிகாலையில் எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    விபத்து ஏற்படுத்திய 3 பேரையும் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். கைதான மாணவர்கள் ஒருவர் திருவான்மியூரை சேர்ந்தவர், மற்றொருவர் பாலவாக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.

    பலியான ஹேமச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் இன்று காலை மாமல்லபுரம் வந்து இருக்கிறார்.

    அந்த நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய போது கார் மோதி பலியாகி விட்டார். இதேபோல் பலியான மற்றொருவரான ஏகாம்பரமும் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்ததாக தெரிகிறது.

    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய 2 பேர் கார் மோதி பலியான சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை அருகே இன் று காலை கார்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள். #accidentcase

    சூலூர்:

    கோவை பீளமேடு சேரன்மா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் கவுதம் (22). என்ஜினீயரிங் மாணவர்.இன்று காலை கவுதம் தனது நண்பர்கள் சிதம்பர நாத், கோகுல் நாத், சல்மான் போரீஸ், விக்னேஷ்வர், மற்றும் ஒருவருடன் காரில் கிரிக்கெட் விளையாட சென்றார். இந்த கார் எல்அண்டி பைபாஸ் சாலை வெங்கிட்டாபுரம் -குளத்தூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது பின்னால் கோவை எட்டிமடையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமாக கார் கல்லூரிக்கு வந்த விருந்தினர்களை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து ஏற்றி கொண்டு பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    வெங்கிட்டாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கவுதம் சென்ற கார் டிரைவர் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டார்.

    உடனே கார் பின் பக்கமாக திரும்பியது. அந்த சமயத்தில் பீளமேட்டில் இருந்து சென்ற கல்லூரிக்கு சொந்தமான கார் அதன் மீது மோதியது.

    இதில் கல்லூரி மாணவர் கவுதம், அவரது நண்பர்கள் சிதம்பர நாத், கோகுல் நாத் 3 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

    இரு சக்கர வாகனத்தில் சென்ற சூலூர் அருகே உள்ள கணியூரில் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வரும் சூர்யா, கல்லூரிக்கு சொந்தமான காரை ஓட்டி சென்ற டிரைவர் வினிஷ், சுபிஜித், மோகித், பலியான மாணவர் கவுதமின் நண்பர்கள் சல்மான் போரிஸ், விக்னேஷ்வர் மற்றும் ஒருவர் என 7 பேர் பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சுந்தராபுரத்தில் கடந்த 1-ந் தேதி சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் புகுந்து கல்லூரி மாணவி உள்பட 6 பேர் பலியானார்கள். அந்த சோகம் மறைவதற்குள் இன்று கார்கள் மோதி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது கோவையில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி அருகே விபத்தில் தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த உச்சியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சரோஜா (வயது45).

    இவர்களது மகன் காளியப்பன் (19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை சரோஜாவும், காளியப்பனும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கம்பைநல்லூருக்கு மாவு அரைக்க வந்தனர்.

    பின்னர் மாவு அரைத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பி சென்றனர். அப்போது கம்பைநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து காளியப்பன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காளியப்பன், சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரோம்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    தாம்பரம்:

    அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று மாலை தனது நண்பரை பார்க்க குரோம்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பஸ் டிரைவர் சுந்தரராஜன் (68) கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.

    துறையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பஜனை மடத்தெருவை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மகன் விக்னேஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் கார்த்திக் (வயது 19). இருவரும் நண்பர்கள்.

    கார்த்திக் கோவையில் பணியாற்றி வருகிறார். ஊருக்கு வந்திருந்த அவர் நேற்றிரவு கோவைக்கு புறப்பட்டார்.இதையடுத்து அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக விக்னேஷ், கார்த்திக்கை மோட்டார்சைக்கிளில் அழைத்து கொண்டு துறையூருக்கு சென்றார்.

    உப்பிலியபுரம்-துறையூர் இடையே சிக்கத்தம்பூர் பட்டாங்கோவில் அருகே செல்லும் போது, அந்த வழியாக சிறுகாம்பூர் செங்கொடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), அவரது மனைவி செல்வி (25) மற்றும் உறவினர் கிருப , 1½ வயது குழந்தை சுபஸ்ரீ ஆகியோர் ஒரு மொபட்டில் உப்பிலியபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    உடனே சம்பவ இடத் திற்கு உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த விபத்தில் குழந்தை சுபஸ்ரீ லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே கணவருடன் மொபட்டில் சென்ற பெண், லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ராமேசுவரி (வயது 32). இவர்கள் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காட்டு பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர்.

    கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் புறப்பட்டனர். குறுக்குச் சாலையில் இருந்து 4 வழிச்சாலையில் மொபட் ஏறிய போது அந்த வழியே வத்ராயிருப்பைச் சேர்ந்த மகாலிங்கம் ஓட்டிவந்த டேங்கர் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட்டில் உரசியது.

    இதில் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து பிரபுவும், ராமேசுவரியும் சாலையில் விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பிரபுவுக்கு லேசான காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எர்ணாவூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருவொற்றியூர்:

    எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சிகாமணி. இவரது மகன் ஜெயபாண்டி (வயது21) என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஜெயபாண்டி தனது நண்பர் பாரதியார் நகரைச் சேர்ந்த ரிக்டர் என்பவருடன் எர்ணாவூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று நிலை தடுமாறி பாலத்தின் நடுவில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் ஜெயபாண்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரிக்டர் பலத்த காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மாதவரம் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    காடையாம்பட்டி அருகே விபத்தில் காயம் அடைந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிபாடி சாமியார்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 63). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகலூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தைதடம் என்ற இடத்தில் நெடுஞ்சாலையை கடந்தபோது தர்மபுரியில் இருந்து வந்த கார் அவர் மீது வேகமாக மோதியது.

    இதில் கோபால் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 34).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சரக்கு ஆடடோவில் ஆப்பக்கூடல் அருகே கரட்டூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென ஆட்டோ அவரது பிடியில் இருந்து நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே ஆட்டோ இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் இரவில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான குருமூர்த்தி உடல் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை வருகிறார்கள்.

    விபத்தில் பலியான குருமூர்த்திக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். #accidentcase

    ஆலப்புழா அருகே விபத்தில் பெண் போலீஸ் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருவனந்தபுரம்:

    ஆலப்புழாவை அடுத்த அம்பலபுழா பகுதியில் இன்று அதிகாலை ஒரு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    அங்கமாலியில் இருந்து கொட்டியம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    அப்போது காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் பலியானது தெரிய வந்தது. இன்னொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் சிக்கிய காரில் வந்தவர்கள் போலீசார் என தெரிய வந்தது. ஒரு வழக்கு விசாரணைக்காக கொட்டியம் போலீஸ் நிலையம் பெண் போலீஸ் அதிகாரி ஸ்ரீகலா (வயது 30) மற்றும் போலீஸ்காரர் நிசார் (42) ஆகியோரும் ஹசீனா (30) என்ற பெண்ணும் காரில் இருந்துள்ளனர்.

    காரை டிரைவர் நவ்பால் ஓட்டி உள்ளார். லாரி மீது கார் மோதியதில் பெண் போலீஸ் ஸ்ரீகலா, டிரைவர் நவ்பால் மற்றும் ஹசீனா ஆகிய மூவரும் இறந்து விட்டனர். நிசார் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கேளம்பாக்கத்தில் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி. இவர்களது 4-வது மகன் செவன் ரித்விக். அங்குள்ள மழலையர் பள்ளியில் படித்து வந்தான். மகனை பள்ளியில் விடுவதற்காக் பத்மினி மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    வீடு அருகே உள்ள சிக்னலில் திரும்புவதற்காக நின்றபோது பின்னால் வந்த மண் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறுவன் ரித்விக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×